இந்தியா, மார்ச் 24 -- This Week OTT: மார்ச் மாத இறுதி வாரத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் மற்றும் வலைத்தொடர்கள் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராகி வருகின்றன. இவற்றில் சில மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை. ஹாலிவுட் படமான முஃபாசா, ஹாரர் த்ரில்லர் படமான சப்தம் என ஓடிடியில் வெளியாகும் படங்கள் வலைதொடர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க: 6000 கோடி வசூலைப் பிடித்த முஃபாசா தி லயன் கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படம் 'முஃபாசா: தி லயன் கிங்' இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளது. மார்ச் 26 ஆம் தேதி இந்த படம் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்கிற்கு வரும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் ஸ்ட்ரீம் செய்யப்படும். சிங்கங்கள் உட்பட காட்டில் உள்ள விலங்குகளுடன் நடைபெறும் இந்த ஆக்‌ஷன் படத்தை ஜ...