மதுரை, பிப்ரவரி 6 -- மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் தொடர்பாக, மதுரை கலெக்டர் சங்கீதா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், பிரச்னைக்கான காரணம் என்ன? அதைத் தொடர்ந்து நடந்தது என்ன? என்பது குறித்து விளக்கியிருந்தார். அதன் ஒரு பகுதியில், ''திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 30.01.2025 அன்று உள்ளூரைச் சேர்ந்த மேற்படி நபர்களை (சி.பி.எம், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட், திர்ணாமுல் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக், வி.சி.க. கட்சியின் பிரதிநிதிகள்) அழைத்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

மேற்படி அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் திருப்பரங்குன்றம் நகரை சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழி...