இந்தியா, பிப்ரவரி 3 -- முருக பக்தர்களை ஒடுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, காட்டாட்சி என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் உணர்வோடு, வாழ்வியலோடு இரண்டற கலந்து விட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். இங்கு ஒரு தர்கா இருப்பதை காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் முருகன் கோயிலை சீர்குலைக்கவும். திருப்பரங்குன்றம் மலைக்கு சொந்தம் கொண்டாடி, ஆக்கிரமிக்கும் உள்நோக்கத்தில் சில சக்திகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், தனது ஆதரவாளர்களுடன் சென்...