மதுரை,திருப்பரங்குன்றம், பிப்ரவரி 5 -- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரச்னை எங்கிருந்து தொடங்கியது, தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து விளக்கியுள்ளார். இதோ அவருடைய அறிக்கையில் கூறியிள்ளதை காணலாம்:

''கடந்த 04.12.2024 அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் தெருவில் மலை மேல் உள்ள தர்ஹாவில், கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகையினை தர்கா மேனேஜிங் டிரஸ்டியினரால் புதிதாக வைக்கப்பட்டுள்ளதாக, திருக்கோயில் மூலம் திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்படி வாசகம் நீக்கம் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் 25.12.2024 அன்று காலை 0...