இந்தியா, பிப்ரவரி 17 -- திருப்பரங்குன்றம் மலையை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்து உள்ளது

திருப்பரங்குன்றம், ஹார்விபட்டியை சேர்ந்த இளங்கோ என்பவர் மதுரை வனச்சரக அலுவலருக்கு, திருப்பரங்குன்றம் மலையை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்க கோரி மனு அளித்து இருந்தார். அம்மனு தொடர்பாக மதுரை வனச்சரக அலுவலர் விளக்கம் அளித்து பதில் எழுதி உள்ளார்.

அதில், 29.01.2025 ஆம் தேதி களத்தணிக்கை மேற்கொண்டதில் புகார் மனுவில் குறிப்பிட்ட பகுதியில் மாநகராட்சி சூழியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி இடமானது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது எனத் தெரியவருகிறது. மேலும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் பல்வேறு வகையான மரங்கள் அடந்து காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையை சு...