இந்தியா, பிப்ரவரி 4 -- திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த அழகாபுரியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க இந்து முன்னணி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என ஹெச்.ராஜா சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.

இதனை அடுத்து நேற்றைய தினம் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை திருப்பூரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமண்யம் கைது செய்யப்பட்டார். மேலும் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தி திட்டமிட்டதாக பல்வேறு இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகி...