இந்தியா, பிப்ரவரி 5 -- Thiruparankundram Issue: சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்ரவரி 05) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மற்றும் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "தயவுசெய்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். முழுக்க முழுக்க அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்களைப் பொருத்தவரை பாஜக-வினர் தான் என்று நான் குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தில் இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்று நடத்தப்பட்ட போராட்டம் என்பது தேவையற்ற ஒரு போராட்டம். பல்வேறு ஊடகங்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றிகூற கடமைப்...