இந்தியா, பிப்ரவரி 16 -- திருநெல்வேலி என்றாலே அனைவருக்கும் அல்வா தான் நினைவிற்கு வரும். ஆனால் திருநெல்வேலியில் இந்த திருப்பாகமும் ஸ்பெஷல் தான். இந்த திருப்பாகம் எப்படி செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஒரு கப் கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒரு கடாயில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து எடுத்து பின்னர் அதனை ஒரு சல்லடை போட்டு சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது சுத்தமான பசும்பால் நெய்யை கடலை மாவு அளந்த அதே கப்பில் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் ஊற்றி அதில் நாம் வறுத்து சலித்து வைத்த கடலை மாவை போட்டு கட்டி இல்லாமல் நன்கு கிண்டவும். மிதமான தீயில் வைத்து நன்கு கிண்ட வேண்டும். பின்னர் கெட்டியான பதத்திற்கு வரும் அப்பொழுது இரண்டு கப் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதனையும் ஊற்றி...