இந்தியா, ஏப்ரல் 13 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக்கூடியவர் சிவபெருமான். இருப்பினும் சிவபெருமான் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு சிவபெருமானை வழிபட்டாலும் தமிழ் மொழியின் நாயகனாக விளங்க கூடியவர் சிவபெருமான் என தமிழ் நூல்கள் கூறுகின்றன.

அதன் காரணமாக நூல்களில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று வழிபாடு செய்து வருகின்றனர். சைவ மதத்தை பின்பற்றி எத்தனையோ தொண்டர்கள் சிவபெருமானின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வந்தனர்.

அதில் குறிப்பாக சிவபெருமானின் புகழை தமிழால் எடுத்துரைத்து சிவ தொண்டர்களாக வாழ்ந்தவர்கள் தான் 63 நாயன்மார்கள். அதில் ஒருவர் தான் அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார்.

மேலும் படிங...