இந்தியா, பிப்ரவரி 7 -- Thengai Therattipal Recipe : இந்திய சமையல் பலவற்றில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. காரம் சேர்க்கும் குழம்பு முதல் இனிப்பு பதார்த்தங்கள் வரை தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த தேங்காயை பயன்படுத்தி செய்யும் தேங்காய் திரட்டி பால் சாப்பிட்டு இருக்கிறீர்களா.. திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இந்த தேங்காய் திரட்டி பாலை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதை எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

ஒரு கப் தேங்காயை துருவி எடுத்து கொள்ள வேண்டும். முதலில் ஒரு கடாயை சூடாக்கி அதில் 2 ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து பாசிப்பருப்பை நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பருப்பை ஆற வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் பாசி பருப்பை சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் அதில் துரு...