இந்தியா, மார்ச் 3 -- Thandel OTT: நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ஸ்ரீகாகுளம் மீனவர்கள் பற்றி எடுக்கப்பட்ட படம் தண்டேல். இந்தப் படம் வெளியான நாள் முதலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றது.

இந்நிலையில், தண்டேல் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி நேற்று மார்ச் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் படி, மார்ச் 7 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தகவலை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது. 'தண்டேல்' படம் நெட்ஃபிளிக்ஸில் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும். தெலுங்குடன், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகி...