இந்தியா, ஏப்ரல் 19 -- சின்னவெங்காயம் - ஒரு கிலோ

(சின்ன வெங்காயத்தை முதலில் தோல் நீக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதை ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒன்றிரண்டாக இரண்டு முறை மட்டுமே ஓட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மையாக அரைக்கக் கூடாது. அரைத்தால் வடகம் நன்றாக இருக்காது. இதை பொடியாக நறுக்கியும் செய்யலாம். முழு வெங்காயமாக சேர்த்தே ஓட்டி எடுக்க வேண்டும். இடித்ததுபோல் திப்பிதிப்பியாக இருக்கவேண்டும்)

மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்

கல் உப்பு - 2 ஸ்பூன்

இந்த மூன்றையும் சேர்த்து பெரிய தட்டில் பரவலாக தூவி நல்ல மொட்டை மாடி வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரு நாள் காய வைத்து, மாலையில் எடுத்து வீட்டுக்குள் ஃபேன் காற்றில் வைத்து உலர்த்த வேண்டும்.

இரவில் இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தில் உள்ள ஈரப்பதம் அனைத்தும...