இந்தியா, பிப்ரவரி 17 -- Thalapathy Vijay: நடிகர் விஜய், நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, மெல்ல மெல்ல குடும்ப ரசிகர்களை கவர்ந்து பின், ஆக்ஷன் ஹீரோவாக மாறி, தற்போது தளபதியாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

இந்த சமயத்தில் அவர், தற்போது அரசியலிலும் களம் கண்டு வருகிறார். அதனால், தன் திரைப் பயணத்தை ஜனநாயகன் படத்துடன் நிறுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், கூரன் பட விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநரும் நடிகரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யை எப்படி மக்கள் மனதில் ஹீரோவாக பதிய வத்தேன். அதற்காக எப்படி எல்லாம் புரொமோட் செய்தேன் என பேசி அதிரடி காட்டியுள்ளார்.

அவர் பட விழாவில் பேசிய போது, " நான் விஜயகாந்தோட நிறைய படம் பண்ணிருக்கேன். ஆரம்பத்துல இருந்து பாத்தா சட்டம் ஒரு இருட்டறை...