இந்தியா, ஜனவரி 27 -- நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 69 வது படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் போஸ்டர் 76 வது குடியரசு தினமான நேற்றைய தினம் வெளியானது. இந்தப்படத்தை முடித்த பின்னர், அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து விட்டார். அதற்கான பணிகளையும் மிகவும் மும்மரமாக செய்து வருகிறார்.

இதற்கிடையே, அவருக்கும் அவரது மனைவி சங்கீதாவுக்குமான உறவில் விரிசல் விழுந்து விட்டதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்திகள் உலாவி வந்தன. ஆனால், அந்த செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விஜயின் மாமாவும், ஒளிப்பதிவாளருமான ஆர். செல்வகுமார் ஜெம் சினிமா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, 'என்னை விட ஊர் மக்...