இந்தியா, பிப்ரவரி 13 -- Thalapathy Vijay: முதல் சந்திப்பிலேயே விஜய் தனக்கு படவாய்ப்பை கொடுத்த நெகிழ்வான தருணம் குறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வா டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.

அதில் அவர் பேசும் போது, ' விஜய் நண்பர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அது விளம்பரப் படங்களை இயக்கும் பொழுது, எனக்கு கிடைத்தது. ஒரு நாள் அவர்களிடம் நான் 'பிரியமுடன்' கதைக்கான ஒன்லைனை சாதரணமாக சொன்னேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் உடனே இதை விஜயிடம் சொன்னால், சரியாக இருக்கும், நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். நீ தயாராக இரு என்று கூறிவிட்டனர்.

விஜயிடமும் நீ கண்டிப்பாக வின்சென்ட் செல்வாவின் கதையை கேட்க வேண்டும் என்று கூறியதால், விஜயும் அப்படி என்ன சுவ...