இந்தியா, மார்ச் 21 -- Thalapathy Vijay: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்தப் படம் நடிகர் விஜய்யின் கெரியரில் மிக முக்கியமான ஒன்று. இந்தப் படத்தில் விஜய்- ஜெனிலியா ஜோடி பலராலும் கவரப்பட்டது.

தமிழ் ரசிகர்களின் மனதில் எவர்கிரீன் படமாக அமைந்துள்ள இந்தப் படம் தற்போது ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார். சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வரும் கோடையில் இப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புனித வெள்ளி விடுமுறை தினத்தை குறிவைத்து இந்த படத்தை படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக, சச்சின் ...