இந்தியா, ஜனவரி 27 -- தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தி கோட்' திரைப்படம். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில், தி கோட் படத்தின் டெலிவிஷன் பிரீமியர் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

விஜயின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை கொண்டாடியதை போலவே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போவதையும் சென்னை மதுரவாயலில் உள்ள AGS திரையரங்கில் பிரம்மாண்ட கொண்டாடினர்.

இந்த நிலையில...