இந்தியா, ஜனவரி 28 -- Thalapathy Vijay: விடாமுயற்சி திரைப்படம் மூலம் தற்போது மீடியா வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி விஜயை சந்தித்த அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, 'அப்போது விஜய் சாரிடம் ராம் என்ற மேனேஜர் இருந்தார். அவர் மூலமாகத்தான் நான் விஜயை சந்திக்க முயற்சி செய்தேன். அதனைதொடர்ந்து, அவர் விஜய் சாரிடம் கேட்டுவிட்டு, என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர், விஜய் சார் உங்களை பார்க்க விருப்பப்படுகிறார் என்றார். நான் சாரை சந்திக்க சென்றேன். இதற்கிடையே, தற்போது அவரது மேனஜராக இருக்கும் ஜெகதீஷும் இது தொடர்பாக கேள்விப்பட்டிருந்தார்.

நான் அவரது அலுவலகத்துக்குச் சென்றவுடன், விஜய் சார் என்னை வாங்க சார்.. என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டார். நான் எதுவும் வேண்டாம் ச...