இந்தியா, பிப்ரவரி 11 -- Thaipusam 2025: தமிழர்களின் கடவுளாக முருக பெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முருக பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாட்களில் தைப்பூசத் திருநாளும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் முருக பெருமானின் கோயில்களில் தைப்பூசத் திருநாளன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அன்றைய தினம் முருகப்பெருமானின் பக்தர்கள் அவருக்கு அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து தங்களது நேற்று கடன்களை செலுத்துகின்றனர்.

தைப்பூசம் திருநாளானது இந்த ...