இந்தியா, பிப்ரவரி 6 -- Thaipusam 2025: உலகம் முழுவதும் கோயில் கொண்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் முருகப்பெருமான். குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் கட்டாயம் இருக்கும். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் இருக்கின்றன.

முருகப்பெருமானுக்கு விசேஷமான நாட்களில் அங்கு வெகு விமர்சையாக திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 11ம் தேதி அன்று தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தைப்பூசம், ஆடி கிருத்திகை ஆகிய நாட்கள் முருக பெருமானுக்கு மிகவும் விசேஷ நாளாக கருதப்படுகிறது.

இந்த திருநாளில் பக்தர்கள் காவடி சுமந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கமாகும். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்த...