இந்தியா, பிப்ரவரி 9 -- Thaipusam 2025: வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தைப்பூசம் என்கிற விரத நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும்; எப்படி முருகனை வழிபட வேண்டும் என்பது பற்றி ஆத்ம ஞான மையம் யூட்யூப் சேனலின் சார்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறுவதாவது, '' முருக வழிபாடு என்று யோசித்தாலே, அது நம் வாழ்வில் வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய வழிபாடு. எதை நினைக்கிறோமோ, நினைத்ததை நினைத்த வண்ணமே முருகப்பெருமான் நடத்தி தருகிறார். நமக்கு ஏற்படும் அல்லல்களை நீக்கும் வழிபாடு கந்தர் கடவுளின் வழிபாடு. அப்படிபட்ட முருகப்பெருமானுக்கு விரதமிருந்து அனுஷ்டிக்கும் திருநாள் தான், தைப்பூசத் திருநாள்.

பொதுவாக தைப்பூச விரதம் என்பத...