இந்தியா, ஜனவரி 29 -- Thai Amavasai 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த ஆசீர்வாதத்தை பெறக்கூடிய முக்கிய நாளாக தை அமாவாசை திருநாள் வழங்கி வருகிறது. தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய நாளில் அனைவரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்கள் நமக்கு பக்கத்துணையாக இருப்பார்கள் என கருதப்படுகிறது. தை அமாவாசை திருநாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆண் வாரிசுகள் அவர்களை வழிபடுவார்கள்.

இந்த தை அமாவாசை திருநாளில் சில பொருட்களை வாங்கினால் நமது முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தை அமாவாசை திருநாளில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது என்பது கு...