இந்தியா, மார்ச் 13 -- ஒய் நாட் நிறுவனம் மூலம் 'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று', 'ஜகமே தந்திரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த், 'டெஸ்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சித்தார்த்தை சித்தரிக்கும் அர்ஜுனின் கேரக்டர் இடம்பெறும் வீடியோ கிளிப்ஸை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், அர்ஜுன் (சித்தார்த்) இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறிமுகப்படுத்தப்படுகிறார். இருப்பினும், கடந்த 2 சீசன்களாக அவர் சிறப்பாக செயல்படாததால் அவர் ஃபார்மில் இல்லை என்று கருதப்படுகிறது. ஒரு போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்...