இந்தியா, ஏப்ரல் 10 -- தென்காசியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் இளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை வரும் நாளை (ஏப்ரல் 11) சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த அரசு விழாவிற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் 10,000 ரூபாய் வசூலிக்க உத்தரவிடப்பட்டதாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பங்குனி உத்திரத்தையொட்டி நாளைய தினம் உள்ளூர் விடுமுறை இருந்தாலும், யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் உத்த...