இந்தியா, பிப்ரவரி 24 -- Telangana Tunnel Collapse: தெலங்கானாவின் ஸ்ரீசைலம் லெஃப்ட் பேங்க் கால்வாய் (எஸ்.எல்.பி.சி) சுரங்கப்பாதையில் சிக்கிய எட்டு தொழிலாளர்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 48 மணி நேரம் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

தெலங்கானா அமைச்சர் ஜே.கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த சூழ்நிலையில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் எவ்வளவு இருக்கும் என தெரியவில்லை' என்று கூறினார். "சுரங்கப்பாதையின் உள்ளே குப்பை மிகவும் உயரமாக குவிந்துள்ளது, இதனால் நடந்து செல்ல முடியாது. அவர்கள் (மீட்பாளர்கள்) அதன் வழியாக செல்ல ரப்பர் குழாய்கள் மற்றும் மர பலகைகளைப் பயன்படுத்துகின்றனர்" என்று சுரங்கப்பாதையின் உள்ளே சென்ற கிருஷ்ணா ராவ் ...