இந்தியா, பிப்ரவரி 10 -- Teddy Day 2025 : காதல் வாரம் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஆண்டுதோறும் உலக காதலர்களால் காதலர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில்தான் காதலர்கள் பரஸ்பரம் தங்களின் அன்பானவர்களுக்கு எண்ணற்ற பரிசுப் பொருட்களை வழங்கிக்கொள்கிறார்கள். பரிசுகளுடன் தங்கள் காதல் மற்றும் அன்பு என பரிமாறப்படுகிறது. காதலர் வாரத்தின் நான்காவது நாளில், டெடி தினம் கொண்டாடப்படுகிறது. டெடி பியர் பாதுகாப்பு மற்றும் இதத்தைக் குறிக்கிறது. இவை உங்களுக்கு இதமளிக்கும் பொம்மைகள், காதலின் இதத்தை குறிப்பவையாகும். டெடி தினத்தன்று காதலர்கள் தங்களுக்குள் டெடி பியர்களை பரிசுகளாகப் பரிமாறிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒருவரைச் சுற்றி ஒருவர் இதமாகவும், பாதுகாப்பாகவும் உணர்வதை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். அந்த ஒரு சிறப்பான நாளை கொண்டாடும் வேளையில் நாம் த...