சென்னை,கரூர், மார்ச் 19 -- டாஸ்மாக் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி முடித்திருக்கும் நிலையில், 'ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக,' அது தொடர்பான செய்தி குறிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அடுத்தது என்ன? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி முறைகேடு: டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை மாட்டிய பாஜகவினர்!

அந்த மனுவில், 'டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனை தொடர்பாக, மாநில அரசின் அனுமதி இல்லாமல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், விசாரணை என்கிற பெயரில் டாஸ்மாக் ஊழியர்கள், அதிகாரி...