இந்தியா, மார்ச் 17 -- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, சென்னை எழும்பூரில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக இன்று மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டின் முன், காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டனர்.

முன்னதாக, மார்ச் 17ஆம் தேதியான இன்று காலை பாஜகவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கிளம்பி, தாளமுத்து நடராஜர் மாளிகை வரை பேரணியாக சென்று, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாஜகவின...