இந்தியா, மார்ச் 26 -- அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர், அவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நேற்றி அறிவித்திருந்தனர். இதையடுத்து டாஸ்மாக் மதுபான "மோசடி" தொடர்பான வழக்குகள் மாற்று நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய மாற்று பெஞ்ச் முன் பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. ஏனெனில் தலைமை நீதிபதியின் உத்தரவுகளைப் பெற்ற பிறகு மாற்று பெஞ்ச் முன்பு பட்டியலிடப்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். ...