சென்னை,கரூர், மார்ச் 20 -- சோதனை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அந்த சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | TASMAC Scam : 'அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை..' சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மனுத் தாக்கல்!

தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்களுக்கு, அமலாக்க இயக்குநரகம் தனது பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் தாக்கல் செய்ய, மார்ச் 24 திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கியது உயர்நீதிம...