இந்தியா, மார்ச் 28 -- TANCET Result 2024: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும். அதேபோல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'டான் செட்' தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET 2024) முடிவை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu என்ற பக்கத்தில் டான்செட் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் ...