இந்தியா, மார்ச் 23 -- "மக்களை ஏளனம் செய்வது யார்?" என திமுக எம்.பி. கனிமொழிக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன், தமிழகத்தை ஏளனம் செய்வது யார் என்று திமுக எம்.பி. கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு, கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த கனிமொழியின் கருத்துக்கு எதிராக, தமிழக மக்களை உண்மையில் ஏளனம் செய்பவர்கள் திமுகவினரே என்று தமிழிசை சௌந்தராஜன் குற்றம் சாட்டினார்.

தமிழிசை தனது பேட்டியில், "இவங்க பாட்டிலுக்கு கமிஷன் வாங்குறவங்க எல்லாம் இப்படி பேசினா, நேர்மையா அரசியல் செய்றவங்க எப்படி பேச முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். தமிழக நிதி நிலைமை குறித்து திமுகவின் விமர்சனங்களை சுட்டிக்காட்டிய அவர...