இந்தியா, பிப்ரவரி 14 -- Tamil Serials: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து பேசியதை பார்த்து, சாமுண்டீஸ்வரி கோபமான நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க!

சாமுண்டீஸ்வரி ரேவதியை வீட்டிற்கு அழைத்து வந்து கோபப்படுகிறாள். ரோகிணியும் ரேவதியை திட்ட, கடைசி பெண் சுவாதி மட்டும் என்னையும் கூப்பிட்டு இருந்தா, நானும் பாட்டியை பார்க்க வந்திருப்பேன் என்று ஆறுதல் சொல்கிறாள்.

இன்னொரு பக்கம், டாக்டர் மல்லிகாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு, கடந்த 1 மாதமாக கட்டு போட்டு இருந்த நிலையில், தற்போது டாக்டர் ஒருவர் வீட்டிற்கு வந்து, மல்லிகாவின் கட்டை அவிழ்க்கிறார்.

மகேஷ் மற்று...