இந்தியா, பிப்ரவரி 5 -- பிப்ரவரி 5, 2025ஆம் தேதிக்கு முன் இதே பிப்ரவரி 5ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் அஜித்தின் மூன்று படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியாகியுள்ளன. அதே இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படம், வில்லன் நடிகர் நம்பியார் ஹீரோவாக நடித்த படம் உள்பட பிப்ரவரி 5இல் முந்தைய ஆண்டுகளில் ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு

1955இல் எஸ்.ஏ. நடராஜன் இயக்கத்தில் வெளியான அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்த படம் நல்ல தங்கை. வில்லன் நடிகரான எம். என். நம்பியார் கதையின் நாயகனாக நடித்த இந்த படத்தில் டி.எஸ். பாலையா, மாதுரி தேவி, ராஜசுலோசனா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது

டி.ஆர். ராஜேந்தர் இயக்கி, தயாரித்து, இசையமைத்து, நடித்த அண்ணன் - தங்கை பாசத்தை பற்றிய ...