இந்தியா, பிப்ரவரி 7 -- பிப்ரவரி 7, 2025க்கு முன் இதே பிப்ரவரி 7ஆம் தேதியில் சிவாஜி கணேசன் முதல் முறையாக டபுள் ஆக்டிங்கில் நடித்த படம், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் உள்பட முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 7இல் ரிலீஸான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு

1940இல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய உத்தம புத்திரன் படத்தின் திரைக்கதையில் மாற்றங்களை செய்து சிவாஜி கணேசன் நடிக்க, டி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1958இல் வெளியாகி ஹிட்டடித்த படம் உத்தம புத்திரன். இந்த படத்தில் சிவாஜி கணேசன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

பார்த்திபன், விக்ரமன் என நல்லவன், கெட்டவன் என மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். ஹீரோயினாக பத்மினி, ராகினி ஆகியோரும், எம்என் நம்பியார், கேஏ தங்கவேலு, ஓஎகே தேவர், கண்ணா...