இந்தியா, பிப்ரவரி 4 -- பிப்ரவரி 4, 2025ஆம் தேதிக்கு முன் இதே பிப்ரவரி 4ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர், பிரபுதேவா ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ரிலீஸ் சூப்பர் ஹிட் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1949இல் வெளியான படம் நல்லதம்பி, என்.எஸ். கிருஷ்ணன் - டி.ஏ. மதுரம் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி மற்றும் சமூக சிந்தனை படமாக உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா கதை, திரைக்கதை எழுதிய முதல் படம் என்ற பெருமையை கொண்ட நல்லதம்பி, 1936இல் வெளியான மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டவுன் என்ற அமெரிக்க படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

டபி சாணக்யா இயக்கத்தில் எம்ஜிஆர் - கேஆர் விஜயா நடிப்பில் 1966இல் வெளியான படம் நான் ஆணையிட்டால். ஆர...