இந்தியா, பிப்ரவரி 15 -- பிப்ரவரி 15, 2025க்கு முன், இதே பிப்ரவரி 15ஆம் தேதியில் பிரபுவின் ரெமாண்டிக் காமெடி படம், விஜய் கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய பூவே உனக்காக போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு

நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் இயக்கி நடித்து 1985ஆம் ஆண்டில் வெளியான படம் மீண்டும் ஒரு காதல் கதை. ராதிகா கதையின் நாயகியாக நடித்திருப்பார். சாருஹாசன், ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் மூலம் நடிகராக இருந்து வந்த பிரதாப் போத்தன் இயக்குநராக அறஇமுகமானார். மூளை வளர்ச்சி குன்றிய இருவருக்கும் இடையிலான உறவு பற்றி கதையம்ச்சத்தில் உருவாகியிருந்த இந்த படத்தின் அப்போது வித்தியாசமான கதைக்களமாக பார்க்கப்பட்டது. இந்த படத்துக்காக பிரதாப் போத...