இந்தியா, பிப்ரவரி 12 -- பிப்ரவரி 12, 2025க்கு முன் இதே பிப்ரவரி 12ஆம் தேதியில் அஜித்குமார் நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்படன் வெளியாகி அட்டர் பிளாப் ஆன படம் உள்பட முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 12இல் ரிலீஸான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு

முரளி, கெளசல்யா நடிப்பில் ரொமாண்டிக் ட்ராமா படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் காலமெல்லாம் காதல் வாழ்க. 1997இல் வெளியான ஆர். பாலு இயக்கத்தில் வெளியான இந்த படம் கெளசல்யா ஹீரோயினாக அறிமுகமானார். சார்லி, விவேக், கரண், ஜெமினி கணேசன் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் படிக்க: எனக்கும் பிரேக் அப் ஆகிவிட்டது என பளிச்சென சொன்ன கெளசல்யா

தேனிசை தென்றல் தேவா இசையில் படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. ஒரு மணி அடித்தால் என்ற மெலடியும், அண்ணாநகர் ஆண்டாளு என்ற கானா பாடலும், ...