இந்தியா, பிப்ரவரி 11 -- பிப்ரவரி 11, 2025க்கு முன் இதே பிப்ரவரி 11ஆம் தேதியில் அஜித்குமார் நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்படன் வெளியாகி அட்டர் பிளாப் ஆன படம் உள்பட முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 7இல் ரிலீஸான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு

கோத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் ஜெமினி கணேசன், லலிதா, சஹஸ்ரநாமம், சுந்தரி பாய், எஸ்.வி. சுப்பையா உள்பட பலர் நடித்து குழந்தைகளை மையப்படுத்திய குடும்ப படமாக 1955இல் வெளியான படம் வள்ளியின் செல்வன். பாசப் போராட்டத்தை மையப்படுத்திய மெலோ ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வரவேற்பை பெற்றது. ஜெமினி கணேசன் ஹீரோவாக ஆவதற்கு முன்பு நடித்திருந்த படமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக சிறந்த கிளாசிக் பாடலாக, பி.பி. சீனிவாஸ் குரலில் இடம்பிடித்திருக்கும் கண்ணால பேசி ப...