இந்தியா, ஏப்ரல் 14 -- தமிழ் புத்தாண்டு சித்திரையா, தையா? என்பதற்கு வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் விளக்கம் அளித்துள்ளார்.

மன்னர் மன்னன், சங்க இலக்கியங்கள், சோழர் கால கல்வெட்டுகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, சித்திரை முதல் தேதியே தமிழர்களின் புத்தாண்டு என்பதை உறுதிப்படுத்தினார். "சங்க இலக்கியங்களில், சூரியனின் மேஷ ராசி நகர்வு 'ஆடு தலையாக' என்று குறிப்பிடப்படுகிறது. இது சித்திரையில் தொடங்குவதைக் குறிக்கிறது. வேங்கைப் பூ பூக்கும் காலமான பங்குணி இறுதி முதல் சித்திரை ஆரம்பம் வரை தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதப்பட்டது," என்று விளக்கினார். சோழர் காலத்தில் சித்திரையை மையமாகக் கொண்டு ஆண்டு விழாக்கள் நடந்ததற்கு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கு புத்தாண்டு பெரிய கொண்டாட்டமாக இல்லை என்றாலும், சூரியனின் சுழற்சியை ...