இந்தியா, பிப்ரவரி 13 -- தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பால் வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாக்கா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாக்காவையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாண்புமிகு முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில், பால் மற்றும் பால் வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த "காதி & கிராமத் தொழில் வாரியம்" இலாகா, டாக்டர் கே.பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது, வனம் மற்றும் காதி துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக அரசு பொ...