இந்தியா, ஏப்ரல் 12 -- ஏப்ரல் 12, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆக்சன் அவதாரம் எடுத்த வஞ்சிக்கோட்டை வாலிபன், பிரபுவுக்கு சில்வர் ஜூப்ளி படமாக அமைந்த சின்னத்தம்பி, விஜய்யின் ஹிட் படங்களான பத்ரி, தமிழன், விக்ரம் மாஸ் ஹீரோவாக உருவொடுத்த ஜெமினி போன்ற பல ஹிட் படங்கள் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகியுள்ளன. ஏப்ரல் 12ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் வெளியாகியிருக்கும் இந்த படங்கள் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

வரலாற்று சாகச திரைப்படமான வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை எஸ்.எஸ். வாசன் இயக்கியுள்ளார். காதல் மன்னனான அறியப்பட்ட ஜெமினி கணேசன் ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார். வைஜெயந்தி மாலா, பத்மினி, பி.எஸ். வீரப்பா, கே.ஏ. தங்கவேலு உள்பட பலர் நடித்த இந்த படம் அந்த காலகட்டத்திலேயே பாக்ஸ் ஆபிஸ...