இந்தியா, மார்ச் 17 -- மார்ச் 17, 2025க்கு முன், இதே மார்ச் 17ஆம் தேதி விஜயகாந்தின் பாட்டுக்கு ஒரு தலைவன், கார்த்திக் நடித்த உன்னை சொல்லி குற்றமில்லை, அர்ஜுன் நடித்த மனைவி ஒரு மாணிக்கம் போன்ற ரசிகர்களை கவர்ந்த படங்கள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் மார்ச் 17இல் வெளியாகியுள்ள இந்த படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு

லியாகத் அலிகான் இயக்கத்தில் விஜயகாந்த் - ஷோபனா நடித்து 1989இல் வெளியான ரெமாண்டிக் படம் பாட்டுக்கு ஒரு தலைவன். படத்தின் எம்.என். நம்பியார், கே.ஆர். விஜயா, விஜயகுமார், லிவிங்ஸ்டன், எஸ்.எஸ். சந்திரன், ஜனகராஜ், செந்தில் ,கோவை சரளா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தின் விஜயகாந்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இளையராஜா இசையில் நினைத்தது யாரோ என்ற பாடல் சிறந்த மெலடி பாடலாக மாறியது.

ம...