இந்தியா, மார்ச் 26 -- மார்ச் 25, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிந்துரை லிஸ்டில் இடம்பிடித்த அங்காடி தெரு, சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் இணைந்து நடித்த கிளாசிக் படம் வெளியாகி இருக்கின்றன. அதேபோல் தளபதி விஜய் ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் உருவான விஜய் படம், பெட்டிக்குள் முடங்கி கிடந்து தாமத ரிலீஸாக வெளியானது. மார்ச் 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

கே.எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், பத்மினி, வானிஸ்ரீ, எம். என். நம்பியார், நாகேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க 1971இல் வெளியான குடும்ப திரைப்படம் குலமா குணமா. தெலுங்கில் வெளியான தள்ளி பிரேமா என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் அண்ணன், தம்பி உறவை பற்றியை உணர்வுபூர்வமான கதையம்சத்...