இந்தியா, ஏப்ரல் 6 -- ஏப்ரல் 6, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கிளாசிக் ஹிட படமான கவரிமான் வெளியாகியுள்ளது. இதுதவிர இந்த நாளில் வெளியான குப்பி, புதுமுகங்கள் நடித்த அஸ்தமனம் போன்ற படங்கள் கவனத்தை பெற்றன. ஏப்ரல் 6ஆம் தேதி வெளியான படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி, விஜயகுமார், ரவிச்சந்திரன், சேகர், மேஜர் சுந்தர ராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்து 1979இல் வெளியான படம் கவரிமான். இந்த படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதியிருந்தார். பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் சிவாஜி கணேசன் க்ரே ஷேட் கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.

மனைவியை கொலை செய்வது போல் அவரது கதாபாத்திரம் அமைந்திருந்ததை ரசிகர்கள் வி...