இந்தியா, ஏப்ரல் 10 -- ஏப்ரல் 10, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தமிழ் புத்தாண்டு விடுமுறையை கணக்கில் வைத்து பல டாப் ஹீரோக்களின் படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 10ஆம் தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்களான அருணாச்சலம், படையப்பா, உலகநாயகன் கமல்ஹாசனின் காதலா காதலா, ராஜபார்வை, விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் வந்துள்ளன. இதில் கமலின் காதலா காதலா, விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் படங்கள் ஒரே ஆண்டில் ஒரே நாளில் வெளியாகி நேருக்க நேர் மோதிக்கொண்டன். ஏப்ரல் 10 தமிழ் ரிலீஸ் படங்கள் பற்றி பிளாஷ்பேக்கை பார்க்காம்

கே.எஸ். ரவிக்குமார் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் மசாலா படமாக 1999இல் வெளியான படம் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், தேவர் மகன் ப...