இந்தியா, ஏப்ரல் 1 -- ஏப்ரல் 1, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூப்பர் ஹிட் கிளாசிக் படமான சில நேரங்களில் சில மனிதர்கள், சுந்தர் சி இயக்கிய தகதிமிதா, திகில் காமெடி படமான ஹலோ நான் பேசி பேசுறேன் போன்ற ய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களை பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் லட்சுமி, ஸ்ரீகாந்த், சி.கே. நாகேஷ், ஒய்.ஜி.பார்த்தசாரதி, சுகுமாரி, ராஜ சுலேக்சனா உள்பட பலர் நடித்து ரெமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி 1977இல் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாரம்பரியம், கலாச்சாரத்தை கண்டிப்புடன் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாலிய...