இந்தியா, மார்ச் 22 -- மார்ச் 22, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் கார்த்திக் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய கோபுர வாசலிலே, சத்யராஜ் - கவுண்டமணி காமெடியில் கலக்கிய புதுமனிதன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. முந்தையை ஆண்டுகளில் மார்ச் 22ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கோகுல கிருஷ்ணா வசனம் எழுத, கார்த்திக், பானுப்பிரியா பிராதான கதாபாத்திரத்தில் நடித்து 1991இல் வெளியான ரெமாண்டிக் காமெடி படம் கோபுர வாசலிலே. படத்தில் இன்னொரு நாயகியாக சுசித்ரா நடித்திருப்பார். நாசர், சார்லி, ஜூனியர் பாலையா, நாகேஷ், வி.கே. ராமசாமி உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் டார்க் ஹுயூமர் நிறைந்து ட்ராமா ஐயர்னி பாணி கதையாக படம் அமைந்திருக்கும்.

படத்தின் கதாபாத்திரம் தான் ஏமாற்றப்படு...