இந்தியா, மார்ச் 31 -- மார்ச் 31, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் இதே நாளில் சிவாஜி கணேசன் அற்புத நடிப்பில் கிளாசிக் ஹிட் படம், விஜய் சேதுபதி - கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவான கவண், நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்த டோரா ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களை பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமார், ஆர். முத்துராமன், சிவக்குமார், லட்சுமி, எம்.என். நம்பியார் உள்பட பலர் நடித்து வரலாற்று திரைப்படமாக உருவாகியிருந்த ராஜராஜ சோழன் 1973இல் வெளியானது. தமிழில் வெளியான முதல் சினிமாஸ்கோப் படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த படம் 100 நாள்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப சோழ மன்னர் ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த படம்...