இந்தியா, மார்ச் 18 -- மார்ச் 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த நீதிக்கு தலைவணங்கு, சிவாஜி கணேசன் நடித்த என்னைப்போல் ஒருவன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்க வைத்த பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் நடித்த லத்திகா படமும் மார்ச் 18ஆம் தேதி தான் வெளியாகி இருக்கிறது. இந்த படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு

பி. நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் - லதா இணைந்து நடித்து 1976இல் வெளியான படம் நீதிக்கு தலைவணங்கு. தெலுங்கில் 1973இல் வெளியாகி ஹிட்டடித்த நேரமு சிக்சா என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் எம்.என். நம்பியார், விகே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், எஸ் வரலட்சுமி, புஷ்பலதா ரோஜா ரமணி உள்பட பலரும் நடித்திருந்தார்கள்.

படத்தின் ஒரு காட்சியில்...